தலைவர் 173 படத்தை இயக்கப்போவது யார்?

சுந்தர் சி தலைவர் 173 படத்தை தான் இயக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து தலைவர் 173 படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்கள் விவாதித்து கொண்டு இருக்கின்றனர். இரு இயக்குனர்களின் பெயர்கள் தான் தலைவர் 173 படத்திற்காக அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சுந்தர் சி இணைகின்றனர் என கடந்த ஒரு சில மாதங்களாக சொல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் இதை அதிகாரபூர்வமாகவே அறிவித்தனர். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தலைவர் 173 திரைப்படத்தை தயாரிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் இந்த தகவலை கேள்விப்பட்டு உற்சாகமடைந்தனர். 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்ற அளவுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். ஏன் ? என்னாச்சு ? என்பது தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர் சி இப்படத்திலிருந்து வெளியேறிய நிலையில் அடுத்ததாக தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என ரசிகர்கள் தீவிரமாக பேசி வருகின்றனர்.

பெரும்பாலானோர் இந்த இரண்டு இயக்குனர்களுக்கு தான் தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகின்றது. அதில் ஒரு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை வைத்து ஏற்கனவே பேட்ட என்ற திரைப்படத்தை கொடுத்தவர் தான் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி ரசிகர்களை கவர்ந்த பேட்ட திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தலைவரை வைத்து படம் இயக்க கடந்த ஒரு சில ஆண்டுகளாக தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் முயற்சித்து வருகிறாராம்.

தற்போது சுந்தர் சி தலைவர் 173 படத்திலிருந்து விலக அந்த வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜிற்கு கிடைக்கலாம் என பலர் சொல்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் கலகலப்பான ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கவே விரும்பியிருக்கிறார். அதன் காரணமாக தான் சுந்தர் சியை அவர் தேர்ந்தெடுத்தார். கார்த்திக் சுப்புராஜ் படங்களில் காமெடி இருந்தாலும் அவரின் படங்கள் வித்யாசமான ஜானர்களில் தான் இருக்கும். எனவே ரஜினி கேட்பதை போல கலகலப்பான கமர்ஷியல் படத்தை வெங்கட் பிரபுவால் கொடுக்க முடியும்.

ஏற்கனவே வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து கதை பற்றி பேசியிருக்கிறார். எனவே வெங்கட் பிரபு தலைவர் 173 படத்தை இயக்கவும் வாய்ப்பிருப்பதாக சிலர் சொல்கின்றனர். ரஜினிகாந்த் -வெங்கட் பிரபு என்ற வித்யாசமான காம்போ இணைந்தால் கண்டிப்பாக அப்படம் ஜாலியான அதே சமயத்தில் வித்யாசமான படமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகின்றது. மேலும் இப்படம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்தவுடன் துவங்கி விறுவிறுப்பாக குறுகிய காலகட்டத்திற்குள் எடுக்கப்படும் படமாக இருக்குமாம்.

அதே சமயம் கலகலப்பான கமர்ஷியல் படமாகவும் இருக்க வேண்டுமாம். இந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஏற்ற இயக்குனர் ஒருவரை ரஜினியும் கமலும் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். ஒருபக்கம் அறிவிப்பு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் திடீரென சுந்தர் சி இப்படத்தை விட்டு விலகுவதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. மறுபக்கம் சுந்தர் சிக்கு பதிலாக இப்படத்தை இயக்கப்போவது யார் ? என்பதும் தெரியவில்லை.

இவ்வாறு தலைவர் 173 பற்றிய குழப்பங்கள் நீடித்துக்கொண்டே வருகின்றது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுந்தர் சிக்கு மாற்றாக ஒரு இயக்குனரை கமலும் ரஜினியும் தேர்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சுந்தர் சி தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குக்கொண்டு வருகின்றார். அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என தெரிகின்றது.

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி

Selva

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

March 6, 2026

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக,

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12