தற்போதைய சூழலில் உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது

உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது என்று அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய நான்கு உக்ரைன் மாகாணங்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு உதவும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யா கடும் எச்சரிக்கையை விடுத்து வருகிறது.

இதனிடையே, ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்க இருப்பதாக பிரபல செய்தி நிறுவனத்தின் தகவலுக்கு அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் பதிலளித்துள்ளார். உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது, இப்படிப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சாத்தியமில்லாதது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; இது முற்றிலும் பொய்யான பிரசாரம். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான, அதிபர் டிரம்பின் அமைதி முயற்சியை சீர்குலைக்கும் செயலாகும். லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த இந்தப் போரை நிறுத்தும் அதிபர் டிரம்பின் முயற்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். மக்களிடையே கோபம் மற்றும் அச்சத்தை தூண்டி போரை விரிவுபடுத்த முயற்சி நடக்கிறது.

ரஷ்யாவுடன் அமெரிக்க ராணுவத்தை நேரடியாகப் போரில் ஈடுபடுத்துவதற்காக நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரும்புகின்றன. ஆனால், உண்மையில் நேட்டோவுடன் போரிடுவதை ரஷ்யா தவிர்த்து வருகிறது. தற்போதைய சூழலில் உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது, இவ்வாறு கூறியுள்ளார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது