தமிழ் பெண் ஒருவர் தென்னிலங்கையில் படு கொலை

தென்னிலங்கையில் தமிழ் பெண்ணொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்லவத்தை, மகம கிரிவானகெட்டிய தோட்ட குடியிருப்பில் வசித்து வந்த 77 வயதான பெருமாள் லட்சுமி என்ற வயோதிப பெண் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவன் உயிரிழந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அதற்காக அன்னதானம் வழங்கும் நிகழ்விற்கு வீட்டினை தயார் செய்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று மதியம் வீட்டின் வர்ணம் பூசும் பணிகளை முடித்துவிட்டு, தொழிலாளிக்கு சம்பளம் வழங்கிய பின்னர் மூதாட்டி தேநீர் தயாரித்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.

மாலை 5 மணியளவில் தொழிலாளி மீண்டும் வந்து பார்த்தபோது, மூதாட்டி சமையலறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சடலமாகக் கிடந்த மூதாட்டியின் முகத்தின் மீது 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்ததாக அவரது மகள் மனோகரி தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்த தங்க நகைகள், 50,000 ரூபாய் பணம் என்பன திருடப்படவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மூதாட்டியின் நெற்றியிலும் கண்ணிலும் பலத்த காயங்கள் காணப்படுவதால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், குறித்த வீட்டிலிருந்து நாய் விசித்திரமான முறையில் கத்தும் சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளனர்.

உயிரிழந்த மூதாட்டி ஆறு பிள்ளைகளின் தாயார் என்பதோடு, அவர் அடுத்த மாதம் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்லவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Carney

கனடா அமெரிக்காவுக்குப் பதிலடி: இன்று புதிய தீர்வை வரி அறிவிப்பு!

August 26, 2026

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா இன்று (25) அறிவித்துள்ளது.

7SIY5K6KDFHIJECXH6BH3FHLGE

கனடா $27.6 பில்லியன் அமெரிக்க இறக்குமதிகள் மீது பதிலடி வரி விதிப்பு – 

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடியப் பொருட்கள் மீது 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக $27.6 பில்லியன்

462LJO3DBFF6NPN2IULEMMDPRI

வர்த்தகப் போர்: வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவில் கவலையும் புதிய வாய்ப்புகளும்

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான 11-ஆம் மணி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர்

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்