தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்; ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள் வெளியீடு!

முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, “மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்” என்று இப்போது நமக்குத் தேவையான கவிதையை எப்பொழுதோ எழுதிவிட்டார் மகாகவி பாரதியார். இதே கவிதையில்தான், “மண் பயனுற வேண்டும்” என்றும் பாரதியார் சொல்லியிருப்பார். மண்ணும், மக்களும், மாநிலமும் பயன்பெறத் தேவையான கனவுகளை உருவாக்க வேண்டும் என்றுதான் உங்களை நான் அழைத்திருக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவரையும் தனி மனிதர்களாக நான் பார்க்கவில்லை. உங்கள் எல்லோரையும் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக பார்க்கிறேன்! அந்த பெரும் நம்பிக்கையுடன்தான் உங்களுக்கு அழைப்பு விடுத்து வரவைத்திருக்கிறோம். எங்களின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இன்றைய நிகழ்ச்சி போல என்றைக்கும் நடந்திருக்காது. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமல்ல, எதிர்கால தமிழ்நாட்டையும் மனதில் வைத்து, இந்த “தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறோம்!

கடந்த ஐந்தாண்டுகளில், நம்முடைய திராவிட மாடல் அரசு, ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆற்றிய மகத்தான பணிகளை, அளப்பரிய சாதனைகளை சுருக்கமாக, ஆனால், மிகத்தெளிவாக, இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து நம்முடைய அமைச்சர்கள் சிலர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நேரத்தின் நெருக்கடி காரணமாக, அவர்கள் சுருக்கமாக பேசினார்கள். இன்னும் சில அமைச்சர்களும் பேசுவதற்கு நேரம் இடம் கொடுக்கவில்லை. நாம் அவ்வளவு காரியங்களை நிறைய செய்திருக்கிறோம்! எல்லாவற்றையும் இந்த நிகழ்ச்சியில் சொல்ல முடியாத அளவுக்கு மலையளவு சாதனைகளை வைத்திருக்கிறோம்!

ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் – துறையின் அதிகாரிகள், கடைநிலை அரசு ஊழியர்கள் வரை அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, அதன் பயன்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காட்டி வரும் அர்ப்பணிப்பு உணர்வும் – அயராத உழைப்பும் – நிர்வாகத்திறனும் – தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி உயர்த்தியிருக்கிறது

கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சிதான், நான் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம்! சொன்னதை மட்டுமல்ல. சொல்லாத பல முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம்! ஆட்சிக்கு வரும்போது, இவ்வளவு திட்டங்களை நம்மால் நிறைவேற்ற முடியுமா? என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனாலும், அத்தனைத் திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்ற கனவும் எனக்கு இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளுக்கான என்னுடைய கனவுகளில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது என்று இந்த நிகழ்ச்சி மூலமாக அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

jud_1

குற்றவாளி தப்பிச் செல்ல போலிக் கடவுச்சீட்டு கொடுத்து உதவிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

March 6, 2026

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கெசல்வத்த தினூஷ’ வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகப் போலி கடவுச்சீட்டைத்

ba

மட்டக்களப்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர்களை உள்வாங்கப்படவில்லை

bah

ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை அழித்துள்ளோம் – பஹ்ரைன்

March 6, 2026

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் ஏழாவது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை தாம்

man

சாந்திபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய நான்கு பெண்கள் கைது!

March 6, 2026

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 இரவு

joh

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

March 6, 2026

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம்

sl

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது!

March 6, 2026

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக

cru

தீவிரமடைந்து வரும் மோதல்; கச்சா எண்ணெய் விலை குறித்து கட்டாரின் எச்சரிக்கை!

March 6, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

pil

அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில் பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரிய சட்டத்தரணிகள்!

March 6, 2026

உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத்

fiwh

உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை

March 6, 2026

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த

car

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

March 6, 2026

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் 2026-27

st

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்; ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள் வெளியீடு!

March 6, 2026

முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க”

download

படகு விபத்துக்கான முழு விசாரணைக்கு பணிப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து