தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்புவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (26.03.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் அவருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், கொள்கை பரப்புச் செயலாளர் ந. காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோருடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனும் கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பின்போது மத்திய கிழக்குப் போர் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவற்றால் ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தமிழ் மக்களும், டித்வா புயலாலும் தற்போது தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாகவும் மலையக மக்களும் மேலதிகமாக எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றுடன், தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரஜாசக்தி முறைமையால் ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அரச திணைக்களங்களால் தொடரும் காணி அபகரிப்புகள், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, தையிட்டி விகாரை விவகாரம், மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம், ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைத் தமிழ் மக்கள் நிராகரிப்பதற்கான காரணங்கள் உட்படப் பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாக உரையாடப்பட்டதாகத் தமிழ்த் தேசியப் பேரவையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த வருடம் மே மாதத்தில் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சேயை அவரது கொழும்பு அலுவலகத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்.கது

horm

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அனுமதி

March 26, 2026

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு ஈரான்

Education

சித்திரைப் புத்தாண்டுக்கு முன் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள்

March 26, 2026

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ka

கார்க் தீவை எதிரிகள் கைப்பற்றத் திட்டம்

March 26, 2026

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன் எதிரி நாடுகள் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை

pet

வெப்பநிலை அதிகரிப்பு; செல்லப்பிராணிகள் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

March 26, 2026

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதால் இலங்கையில் விலங்குகள் ஒரு அமைதியான வெப்ப நெருக்கடியை எதிர்கொள்வதாக கால்நடை

ch

எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த சீனா இணக்கம்

March 26, 2026

கெமரூன் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், எரிசக்தி மற்றும் விவசாயத் துறைகளை மேம்படுத்துவதற்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத்

ffff

சமஸ்டி அடிப்படையிலான ஆட்சிகுறித்து கனடா உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் வலியுறுத்தல்

March 26, 2026

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் என

batt

மட்டக்களப்பில் பெண்களுக்கு நடந்த வன்முறைக்கு நீதிகோரிப் போராட்டம்

March 26, 2026

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை

rav

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலையில் பிள்ளையான் குழுவுக்கும் தொடர்பு!

March 26, 2026

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றையதினம்(26.03.2026) வழக்கு விசாரணைக்காக எடுத்துக்

har

ஜலசந்தி ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

March 26, 2026

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப்

arres

விபத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் கைது

March 26, 2026

பத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால்

ita

இத்தாலி பொலிஸில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கையர் சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்பு

March 26, 2026

இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது

rus

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை விஜயம்

March 26, 2026

ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷாவின், இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்திற்காக 03/26 அன்று