தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர். சுமார் 1.00 மணி நேரம் சந்திப்பு இடம்பெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப் பரப்புச் செயலாளர் சட்டத்தரணி நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.
By C.G.Prashanthan