தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஆளுநருக்கு 21 எம்.பி.க்கள் பகிரங்க கடிதம்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

சென்னை
தமிழக அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில், நீண்டகால மரபுப்படி ‘தமிழ்த்தாய் வாழ்த்தை’ முதலில் பாடும் நடைமுறையை மீண்டும் கட்டாயம் உறுதி செய்யக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் 21 எம்.பி.க்கள் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு கூட்டாகப் பகிரங்க கடிதம் எழுதியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
கடந்த ஜூலை 28-ஆம் தேதி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர், ஆளுநர் மாளிகையின் (ராஜ்பவன்) அறிவுறுத்தலின்படி முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் என அறிவித்திருந்தார். ‘நீராருங் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது ஒட்டுமொத்தத் தமிழக மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் பெரும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியது.
இதனைச் சுட்டிக்காட்டி எம்.பி.க்கள் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 2026 ஜூன் மாதம் சட்டப்பேரவையில் தாங்கள் ஆற்றிய உரைகூடத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தொடங்கியது; அதைத் தமிழக மக்கள் முழுமனதுடன் வரவேற்றனர். கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநிலப் பாடலை முதலில் பாடும் இதே மரபுதான் பின்பற்றப்படுகிறது. இதனால் தேசிய கீதத்திற்கோ அல்லது வந்தே மாதரம் பாடலுக்கோ எந்தவிதக் குறைவும் நிச்சயமாக ஏற்பட்டுவிடாது. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எவ்வித அவமரியாதையும் செய்யும் நோக்கமில்லை என்பதைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை ஆளுநர் மாளிகை உடனடியாக வழங்க வேண்டும்” என அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்!
#TamilThaiValthu #TamilNaduGovernor #RajendraVishwanathArlekar #TNPolitics #TamilNaduMPs #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #ManonmaniamSundaranarUniversity #TamilNaduNews #Chennai #PoliticalUpdatesTN
go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான