லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இன்றையதினம் கொடிநாள் இடம்பெற்றது.
நேற்றையதினம் (23) நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை லண்டன் டிராபிளாகர் சதுக்கத்தில் தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கொடிநாள் அனுஷ்டிப்பை கௌரவத்துடன் கொண்டாடினர்.
புலிக்கொடியை ஏந்தியவாறு மக்கள் பேரணியாக நகர்ந்ததுடன், சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர்.
பின்னர் தமிழீழ தேசியக் கொடி உயர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.