தமிழீழத்தை நாசமாக்குவது யார் என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளாவிட்டால் வடக்கும் கிழக்கும் அழியும் – அர்ச்சுனா இராமநாதன்

தமிழீழத்தை  நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் மக்கள்  விளங்கிக்கொள்ளாவிட்டால் வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் அழியும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்  கொள்கிறேன். வவுனியா மாநகர மேயரையும்  சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியமை முற்றிலும் சரியானது. அதனை நான் வரவேற்கின்றேன் என பாராளுமன்ற  உறுப்பினர்  அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை  (25) நடைபெற்ற  போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில்  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எதிர்வரும்  மாதங்களில்  நான்  எனது பாராளுமன்ற பதவியை இராஜிநாமா செய்தால், எனது ஆவனத்துக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவார். தயவு செய்து அந்தப் பெண்மணியை பாதுகாப்பான இடத்தில் அமரக்கூடியவாறு ஆசன நிரல் நிலையை இங்கே ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்விடத்தில் ஒரு பெண்மணி இருக்கும் போது அதற்கு அடுத்ததாக பெண் பித்தர் இருந்தால் அந்த பெண்ணால் இருக்க முடியாது. இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி கதிரைகளை மாற்றியமைக்க வேண்டும். கதிரைகளை மாற்றித் தருமாறு நான் பல தடவைகள் கடிதம் கொடுத்துள்ளோம். இதில் கவனம் செலுத்துமாறு கோருகின்றோம்.

இதேநேரம் வவுனியா மாநகர மேயரையும்  சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியுள்ளார்.  ஆளுநரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது. அதனை நான் மிகவும் வரவேற்கின்றேன். தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும். தமிழரை கொலை செய்வது யார்? தமிழீழம் என்ற பெயரில் தமிழரை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் இனம் என்றாவது ஒருநாள் விளங்கிக்கொள்ளாவிட்டால் எமது வடக்கும், கிழக்கும் தொடர்ந்தும் அழியும் என்பதனை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

சைக்கிள் கட்சியினரும், வீட்டு சின்னக் கட்சியினரும் எனது உருவப்படத்துக்கு  செருப்பு மாலை அணிவித்தார்கள். மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதால் நான் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன்.  மக்களுக்காகவே நான் அரசியல் செய்கிறேன். உண்மையை பேசுவதால்  நெருக்கடிக்குள்ளாக்குவதாயின்  சாகும் வரை அரசியல் செய்வேன். எவன் எதிர்த்தாலும் அரசியல் செய்வேன் என்றார்.

CWY7Q7QYY5DLXEWDI2XETVXMWU

முக்கிய ஆதாரங்கள்’ பறிமுதல்: கேப் பிரெட்டன் நபர் மீது பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு

June 26, 2026

இந்த வார தொடக்கத்தில் வீடு ஒன்றிலிருந்து “முக்கிய ஆதாரங்களை” பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அதனைத் தொடர்ந்து கேப் பிரெட்டன்

police rcmp

நியூ பிரன்சுவிக் (N.B.) பால்மோரல் அருகே விபத்தில் ஒருவர் பலி: இரண்டு வாகனங்களைத் தேடும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு

June 26, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள பால்மோரல் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

hamilton police1

ஹாமில்டனில் வாகன நிறுத்துமிடத் தகராறு: பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய இரு பெண்கள் கைது

June 26, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton, Ont.) நகரில் கடந்த வார இறுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் (Parking spot) தொடர்பாக ஏற்பட்ட

10_thirumavalavan-expresses-anguish-over-criticisms-26-06-2026

இழிவாக விமர்சித்து வருகிறார்கள்; வீடியோ வெளியிட்டு திருமாவளவன் ஆதங்கம்!

June 26, 2026

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து வீடியோ வாயிலாக விரிவான

9

எ.வ.வேலு வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

June 26, 2026

ஈரோடு: சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில்

8

பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் -மதிமுக எம்எல்ஏ செந்தில்செல்வன் திட்டவட்டம்

June 26, 2026

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த அறிகுறிகளை வெளிப்படுத்திய நிலையில், அக்கட்சியின் சீர்காழி சட்டமன்ற

732081906_1056317700399332_4953181948006225811_n

வின்சர் நகரில் $30,000 மதிப்பிலான அரிய வகை பறவைகள் திருட்டு: ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு

June 26, 2026

வின்சர் (Windsor) நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றிலிருந்து சுமார் 30,000 டாலர் மதிப்பிலான 30 அரிய வகை (Exotic) பறவைகள்

7

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? – அவரே அளித்த பதில்

June 26, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில்,

6

இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு?

June 26, 2026

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதி இடைத்தேர்தல்கள் அரசியல் களத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம்

PEOPLE ACT

உரிமைப்பந்தம்” அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்சக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அமைதிவழி மக்கள் எழுச்சி

June 26, 2026

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் உண்மைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதி கோரும் குரலை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த

LFD5GM35XRC7XA4LQ5POAXKYLA

வோன் மாளிகையைச் சாம்பலாக்கிய தீ விபத்தின் பின்னணியில் தீவைப்புச் சதி என சந்தேகம்: பொலிஸ்

June 26, 2026

வோன் (Vaughan) நகரில் உள்ள ஒரு மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தீவைப்புச் சதி (Arson)

sar

சரித் அபேசிங்கவின் உறுப்பினர் நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

June 26, 2026

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி