தமிழகத்தில் மார்ச் 26 வரை அதிகபட்ச வெப்பநிலை

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மன்னார் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (மார்ச் 23), நாளை மறுதினமும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 25, 26 தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27, 28 தேதிகளில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 6 செமீ, தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 4 செமீ, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

uk

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பம் வசிப்பதில் சிக்கல்?

March 22, 2026

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர்,

huwa

ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு

March 22, 2026

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு

ff

பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலில் நிலைநிறுத்தம்!

March 22, 2026

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்

jaf

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடலுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

March 22, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. யாழ்ப்பாணம்

ceb dea

பூநகரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

March 22, 2026

பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார் தமது பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில்

cont

எரிபொருள் விலையேற்றம்; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

March 22, 2026

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

ceb

அரசாங்கம் அவசர வேண்டுகோள்

March 22, 2026

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

horm

வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை திறக்க 22 நாடுகள் கூட்டறிக்கை

March 22, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 28-ஆம் திகதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தை அடைந்துள்ளது. ஈரான் மீது

Prive bus

மாலை 6 மணி முதல் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு

March 22, 2026

இன்று (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பேருந்து கட்டணத் திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில்

minn

பலத்த மின்னல் எச்சரிக்கை

March 22, 2026

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (22) நண்பகல் 12.30 மணிக்கு

dru

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

March 22, 2026

படோவிட்ட பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படோவிட்ட பொலிஸ் சோதனைச்

raj

த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது!

March 22, 2026

திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கின்றார்கள். அதன் விளைவு தான் த. வெ. க. வை பார்த்து