நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை எண்ணுாரில், 13 செ.மீ., வரை மிக கனமழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, 16 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
வங்க கடல் பகுதியில் உருவான, ‘மோந்தா’ புயல், நேற்று காலை தமிழக கடலோர பகுதிகளில் இருந்து விலகி, ஆந்திர கடலோர பகுதிக்கு நகர்ந்தது. இது, நேற்று காலை தீவிர புயலாக வலுவடைந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கி நகர்ந்தது.
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த, 36 மணி நேரத்தில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.