டந்த வருடம் ஜூலை மாதம் டொராண்டோவில் இடம்பெற்ற கொலைக் குற்றத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 24 வயதுடைய பிரையன் ஃபுவென்டெஸ் கிராமா கோவை, புதன்கிழமை இரவு மொன்றியல் காவல்துறை கைது செய்துள்ளது. ஃபுவென்டெஸ் கிராமாகோ டொராண்டோவில் மார்ச் 10 அன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
யோர்க்டேல் ஷாப்பிங் சென்டர் வாகன நிறுத்துமிடத்தில் 28 வயதுடைய காஷிப் ஜமால் பென்ட்லி-ஜீன் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்பாக, ஃபுவென்டெஸ் கிராமாகோ கனடா முழுவதும் அமல்படுத்தப்பட்ட பிடிவாரண்டின் கீழ் தேடப்பட்டு வந்தார்.
மொன்றியல் காவல்துறையின் விசேட குற்றப்பிரிவு தலைவர் மெலானி டுபோன் தெரிவித்ததாவது, ரோஸ்மோன்–லா பெட்டி-பாத்ரி பகுதியிலுள்ள ஒரு இடத்தில் அதிகாலை 2:40 மணியளவில் ஃபுவென்டெஸ் கிராமாகோ திடீரெனக் கைது செய்யப்பட்டார் எனவும் அவர் ஆபத்தானவர் என கருதப்பட்டதால் SWAT சிறப்பு படையினருடன் சேர்ந்து அவரை கைது செய்தோம் என்றும் கூறினார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான 20 வயதுடைய பிராட்லி லுகேட்-நிக்கோலாஸ், கடந்த ஆகஸ்ட் மாதம் க்யூபெக் மாகாணத்தின் லாவல் நகரில் கைது செய்யப்பட்டு முதல் நிலை கொலை குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரான 28 வயதுடைய மொன்றியலைச் சேர்ந்த ஜிம்மி புருடெண்டை டொராண்டோ காவல்துறை இன்னும் தேடி வருகிறது.