டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கிறது – ஈ.பி.டி.பி

இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக் கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடகச் செயலாளர் ப.ஸ்ரீகாந்.

டக்ளஸ் தேவானந்தாவின் இலாவகமான அணுகுமுறையினால் உருவாக்கப்பட்ட தமிழ் குடியேற்றங்களே திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இன்றளவும் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதியில், கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஏற்படுத்திய சட்ட ரீதியான தடைகளை மீறி புத்த பெருமானின் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தியையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நாட்டிலே பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்ற சிங்கள பௌத்த மக்களுள் ஒரு பிரிவினர், மத்தியில் மேலாதிக்க சிந்தனைகளும், இனவாத மதவாத சித்தாந்தங்களும் நச்சு செடிகளாக இந்த நாட்டிலே புரையோடிப் போய் இருப்பது புதிய விடயமல்ல,

இதன்காரணமாகவே, 70 களிலும் 80 களிலும் எங்களின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, உட்பட்ட அன்றைய இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

அந்த துரதிஸ்டமான சூழல் இன்றும் இந்த நாட்டிலே இருக்கின்றது. இந்த நச்சு செடி அழிக்கப்பட முடியாத ஒன்றாக, இந்த நாட்டின் சாபக்கேடாக இந்த நாட்டிலே காணப்படுகின்றது.

இந்த யதார்த்தத்தினை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும், பேரினவாத சிந்தனைகளுடனும் மதவாதச் சித்தாந்தங்களுடனும் சமரசம் செய்து தங்களை வலுப்படுத்த முனைவார்கள். அல்லது எதிர் கட்சிகள் அதனை தமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் எனபதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு.

கடந்த காலங்ளில் நாம் ஆளுந் தரப்பாக இருந்த காலத்தில், யதார்த்தங்களை லாவகமாக கையாண்டமையினால், எமது தாயகப் பிரதேசங்களில் எமது மக்களின் இருப்பை சிதைக்கும் நோக்கோடும், எங்களுடைய தொன்மையை அழிக்கும் நோக்கோடும், எமது மக்களின் ஆதிக்கத்தினை குறைக்கும் நோக்கோடும் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு தி்ட்டங்களை தடுத்து நிறுத்த முடிந்திருந்தது.

பல உதாரணங்களை சொல்ல முடியும்.

குறிப்பாக, 1994 ஆம் ஆண்டு காலப் பகுதியில் திருகோணமலையில் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரச காணியில் குடியேற்றங்களை உருவாக்க ஒரு தரப்பு திட்டமிட்டதை அறிந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, லாவகமாக குறித்த இடத்தில் 13 தமிழ் குடியேற்றங்களை உருவாக்கினார். இந்தக் குடியேற்றங்களே திருமலையில் இன்றளவும் ஒரு தமிழ் நாடாளுமன்ற உருப்பினரையாவது பாதுகாத்தூள்ளது.

அதேபோன்று, திருகோணேஸ்ரம் ஆலயத்தின் தொன்மையை சீரழிக்கும் வகையிலான கட்டுமானங்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு, யாழ்ப்பாணத்தில் தனிநாயகம் அடிகளாரின் சிலை அமைத்தமை, நாவற்குழியில் குடியேற்றம் அமைத்தமை , கடலட்டை பண்ணைகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கியமை போன்ற விடயங்களை லாவகமாக கையாண்டிருந்தார்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில், இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்ட, விடயங்களை தமிழ் மக்களின் இருப்பு மற்றும் எதிர்காலம், பதுகாப்பு சார்ந்து சிந்தித்து லாவகமாக விடயங்களை கையாலக்கூடிய ஒருவர் இல்லை என்பதையே திருகோணமலை விவகாரம் வெளிப்படுத்தி இருக்கின்றது.

ஆகவே, இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சார்ந்து இவ்வாறான விடயங்களை கையாளுகின்றவர்கள் மிகவும் நிதானமாக கையாள வேண்டும். வெறுமனவே, உணர்ச்சிவயப்பட்டு உணர்வு ரீதியான தீர்மானங்கள் மேற்கொள்ப்படுமாயின் அது எமது மக்களின் தலைகளில் நாமே மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது என்பதை புரிந்து செயற்பட வேண்டும். இதனை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

By C.G.Prashanthan

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்