ஜெஃப்ரி எப்ஸ்டீன்பிரேத பரிசோதனை அறிக்கை; கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்?

உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் தற்போது மிக பிரபலமாகியுள்ள நிலையில் எப்ஸ்டீனின் மரணம் தவறான முடிவெடுத்தால் நிகழ்ந்ததாக தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஓஸ்ட் 10 ஆம் திகதி தனது சிறையில் தனது அறையில் அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

அந்த நேரத்தில் நியூயார்க் நகர முதன்மை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தூக்கிட்டு தவறான முடிவெடுத்து கொண்டதாக அறிவித்தது. ஆனால் அது தற்கொலையா என்பது குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து வருகின்றது எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய காணொளிகள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார்.

அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு ட்ரம்ப், பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே எப்ஸ்டீன் உண்மையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வழக்கில் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அவற்றை மறைக்க கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் மீண்டும் பரவலாக எழுந்துள்ளது.

இந்தநிலையில் பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் ஊடகமொன்றிற்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், எப்ஸ்டீனின் மரணம் தூக்கு போட்டதால் நிகழ்ந்ததுபோல் தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன என்று கூறிய அவர், தனது 50 ஆண்டுகால மருத்துவப் பணியில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட எவருடைய கழுத்திலும் இதுபோன்று மூன்று முறிவுகளைத் தான் பார்த்ததே இல்லை என்று பேடன் கூறியுள்ளார்.

தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா சாம்சன், பிரேதப் பரிசோதனையை நேரில் பார்க்காமலேயே இது தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகப் பேடன் குற்றம் சாட்டியுள்ளார்.

2023-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், எப்ஸ்டீன் இருந்த சிறையில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை உறுதிப்படுத்தியது.

அவரது அறையில் வழக்கமான சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எப்ஸ்டீனின் வழக்கறிஞர்களும் இந்த அதிகாரப்பூர்வ பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.