கொழும்பு காலிமுகதிடலுள்ள ஜனாதிபதி செயலகம் முன்பாக நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியகியுள்ளது.
பாணந்துறையில் இருந்து கொழும்பு செல்லும் பேருந்து ஒன்றின் நடத்துனரும் அவரது நண்பரும் இணைந்து பயணியைத் தடியால் தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று காலை காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகாமையில் நடந்தது.
பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரை, பேருந்து நடத்துனரும் நண்பரும் இணைந்து தடியால் கடுமையாகத் தாக்கும் காட்சியை, பேருந்தில் இருந்த மற்றொரு பயணி தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தவறு யாருடையதாக இருந்தாலும், சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பது சில சமயங்களில் கொலையில் முடியலாம் என பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் முக்கியமான பொது இடத்தில் கூட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.