கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற பி குழு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் அநுராதபுரம் சொலிட் கழகத்தை 4 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம் தனது முதலாவது வெற்றியை சுவைத்தது.
சோண்டர்ஸ் கழகத்துடனான போட்டியை சமநிலையில் முடித்தது நிகம்போ யூத்
சோண்டர்ஸ் கழகத்துக்கும் நிகம்போ யூத் கழகத்துக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்திய ஏ குழுவுக்கான போட்டி 2 – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும் 76ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் பின்கள வீரர் மொஹமத் பவ்ஸான் முரணாக விளையாடியதால் மத்தியஸ்தர் நிவொன் ரொபேஷின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.
அந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கப்பெற்ற 25 யார் தூர ப்றீ கிக் மூலம் மதுசன்க திசேரா மிக அருமையான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை 2 – 2 என சமப்படுத்தினார்.