சேதமடைந்த மத, கலாசார, தொல்பொருள் தளங்களை விரைவாக புனரமைக்க நடவடிக்கை!

தித்வா புயலால் நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளன. அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார்.

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அந்த இடங்களின் தொன்மையை பாதுகாத்து, அனைத்து தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மனித வளங்கள் மற்றும் நிதி தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த தளங்கள் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவையான தொழில்நுட்ப அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர இதன் போது தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளையும், அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் குறிப்பிட்டார். மேலும், சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட நிதியத்திற்கு, தற்போது நன்கொடையாளர்களிடமிருந்து அதிகமான நிதி நன்கொடைகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நேற்று கூடிய சபை, இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடும் சர்வமதக் குழுவாகத் தொடர்ந்து செயல்படுவது குறித்தும் கவனம் செலுத்தியதுடன், அதன்படி, நிர்மாணங்களின் முன்னேற்றத்தை இந்தக் குழுவிடம் தொடர்ந்து முன்வைப்பது குறித்தும், வெளிப்படைத்தன்மையுடன் நிதியத்திற்கான, வெளிநாட்டு உதவிகள், வெளிநாட்டு அமைப்புகள் ,பௌத்த அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளின் உதவிகளைப் பெறும் பணியை குழுவிடம் ஒப்படைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுவரோவியப் பாதுகாவலர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் அறிவு தேவைப்படும் அனர்த்தத்தினால் கடுமையாக சேதமடைந்த மற்றும் சாதாரண நிர்மாணத்தின் கீழ் மீளமைக்க முடியாத 08 இடங்களை மத்திய கலாசார நிதியம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றுக்கு 500 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாட இன்த குழு மாதத்திற்கு ஒரு முறை கூடுவது என்றும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதிலும் அரசாங்கம் தலையிட்டதற்கு மதத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இந்த விடயங்களை மிகச் சிறப்பாக நிர்வகித்ததற்காக அரசாங்கத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், சேதமடைந்த மதத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கைக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது