கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் உள்ள வீட்டின் உரிமையாளர், சந்தேக நபரை தப்பிச் செல்ல ஏற்பாடு செய்தவர் என்றும், படகை வழங்கியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஒன்பது பேரை பொலிஸார ;இதுவரை கைது செய்துள்ளனர்.
பிப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த பின்னர், தொடங்கொட மற்றும் மித்தெனிய பகுதிகளில் இருந்த சந்தேக நபரான செவ்வந்தி, மே 6 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கிய நபருக்கு அதற்காக 2.5 மில்லியன் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.