செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அமர்வில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமரவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியிலாளர் சி.த.காண்டீபனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் சபையில் நீண்ட விவாதமும் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு இடம்பெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் சபை செயலாளரிடம் 6 உறுப்பினர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் பணியாற்றும் ஊடகங்களின் விபரங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றை குறிப்பிட்டு தொடர்ச்சியாக இடம்பெறும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரி சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் கடிதம் அனுப்பியிருந்தது.

இருப்பினும், இதற்கு எழுத்து மூலமான பதில் எதுவும் வழங்கப்படாத நிலையில், முதலாவது சபை அமர்வின் போது ஊடகவியலாளர்கள் 6 பேரும் தொடர்ச்சியாக சபை அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் என செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் சபையில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.

இதில் தவிசாளர் தலைமையிலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எவராக இருந்தாலும் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதிபெற்ற பின்னரே சபைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த காணொளி ஊடக அறியமுடிந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

1688202098-EARTHQUAKE-6

தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

March 24, 2026

தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா (Tonga) அருகே செவ்வாய்க்கிழமை ரிக்டர் அளவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Ranil

இலங்கையில் வன்முறைகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் நீதித்துறையினருக்கு ஆபத்து – ரணில் சஜித் நாமல் சர்வதேச அமைப்புகளுக்கு கூட்டாகக் கடிதம்

March 24, 2026

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சட்ட அமலாக்கத்துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ள சூழலில், சட்டத்தரணிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல்கள் குறித்து

ea

பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள்!

March 24, 2026

கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம்

Inuvil

இணுவிலில் தாக்குதல் சம்பவம்: நால்வர் காயம்

March 24, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

விபத்தில் இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு

March 24, 2026

கதிர்காமத்தில் இருந்து செல்லக்கதிர்காமம் நோக்கிச் சென்ற சபாரி ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஓய்வுபெற்ற இராணுவச்

34

கொலம்பியாவின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 வீரர்கள் பலி

March 24, 2026

ன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இராணுவ விமானம்

garm

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவில் இலங்கையின் ஆடைத்துறை தங்கியிருப்பது ஆபத்து!

March 24, 2026

இலங்கை ஆடைத் தொழில்துறை தொடர்ந்தும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை மட்டும் தங்கியிருப்பது பெரும் ஆபத்தானது

Lit

லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவித்தல்!

March 24, 2026

லிட்ரோ எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் இந்த

Ranjith

அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள்!

March 24, 2026

அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்களே இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் அரசே

Madura senavi

பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

March 24, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள எந்தவொரு பரீட்சையையும் ஒத்திவைக்கவோ அல்லது மறு அட்டவணைப்படுத்தவோ தற்போது

jour

செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்!

March 24, 2026

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அமர்வில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள

Udayange hema

விலை நிர்ணய ஏற்பாட்டைத் தொடர்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தைப் பெறத் தவறினால் எரிபொருள் விலைகள் மீண்டும் உயரும் – அரசாங்கம் எச்சரிக்கை

March 24, 2026

தற்போதைய எரிபொருள் விலை நிர்ணய ஏற்பாட்டைத் தொடர்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கீகாரத்தைப் பெறத் தவறினால், மானியச் செலவுகளை