செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 16ஆம் நாளான இன்று வியாழக்கிழமை, புதிதாக 08 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூட்டில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மொத்தம் 283 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 279 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இது இலங்கை உள்நாட்டு யுத்தகால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான தொல்லியல் ஆதாரமாக கருதப்படுகிறது. அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன