வட ஆப்ரிக்க நாடான சூடானில், கோர்டோபான் மாகாணத்தின் கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து, ஆர்.எஸ்.எப்., படை கடந்த 5ம் தேதி ‘ட்ரோன்’ தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில், 63 குழந்தைகள், மருத்துவ பணியாளர்கள் உட்பட 114 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
‘இது அப்பட்டமான மனித உரிமை மீறல்’ என, கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், சுகாதாரம் உட்பட மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தி உள்ளது.