சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

• “Clean Sri Lanka ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டம்” 29 ஆம் திகதி

• “கடற்படை பங்களிப்புடனான சிரமதான நடவடிக்கை” டிசம்பர் 13 – 14

சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டம், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு சிவனொளிபாத யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு, சிவனொளிபாத மலையின் புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி, குறித்த சூழல் கட்டமைப்பை பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் மீண்டும் மாசடைவதைத் தடுக்கவும் கூட்டு வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையின் தலைமையிலான இந்த “சிறப்பு நடவடிக்கை” நவம்பர் 29 வரை நடைபெறும்.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கடைசி நாளான நவம்பர் 29 ஆம் திகதி, நல்லதன்னி மற்றும் பலாபத்தல நுழைவாயில்களில் “Clean Sri Lanka ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டம்” சுமார் 3000 பேர் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.

சிவனொளிபாத தளத்தை பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கத்துடன், இந்த யாத்திரை காலத்தில் ஒரு லிட்டருக்கும் குறைவான (PET) போத்தல்கள், ஒற்றைப் பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொலிதீன் உறைகள் கொண்ட பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மவுசாகலை நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள சூழலை சுத்தம் செய்வதற்காக “கடற்படை பங்களிப்புடனான நடவடிக்கையை” மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நீண்டகால நடவடிக்கைகளாக, சிவனொளிபாத தளத்தில் நீர் வசதிகள் மற்றும் மலசலகூடக் கட்டமைப்பை முறைமைப்படுத்துதல், வீதியின் இருபுறமும் தரமான விற்பனை நிலையங்கள், நல்லதன்னி அருகே வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்றை நிறுவுதல் மற்றும் பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தை நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த செயற்திட்டத்திற்கு பொது நிர்வாக அமைச்சு, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலகங்கள், முப்படைகள், இரத்தினபுரி மற்றும் ஹட்டன் டிக்கோயா, அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச சபைகள், இலங்கை பொலிஸார், தொண்டர் அமைப்புகள், சுற்றாடல் அமைப்புகள் உட்பட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

By C.G.Prashanthan

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்

images - 2026-08-25T191417.284

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குடும்பத்தினரிடம் சிபிஐ தீவிர விசாரணை!

August 25, 2026

சென்னை: வழக்கு பின்னணியும் காவல்துறையின் நடவடிக்கையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம்

hindutamil-prod_2026-08-25_vhoxai89_BeFunky-collage-2026-08-25T141334.025

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்டதா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு

hindutamil-prod_2026-06-03_rnr6gr52_1354313

“கோப்புகள் இருப்பதாகக் கூறி மிரட்டக் கூடாது!” – சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

August 25, 2026

மயிலாடுதுறை: செய்தியாளர் சந்திப்பு மயிலாடுதுறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று