அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை சிறையில் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (11.03.2026) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
தூசிகள் நிறைந்த சுத்தம் செய்யப்படாத சிறையில் அடைக்கப்பட்டு படுப்பதற்கு ஒரு பாய் கூட வழங்காமல் தரையில் பத்திரிகை விரித்து நித்திரை கொள்கிறார்.
மேலும் அவர் இருக்கும் சிறை அறைக்கு அருகாமையில் இருக்கும் மலசல கூடத்தில் இருந்து வரும் தாங்கிக் கொள்ள முடியாத துர்நாற்றத்தில் சாப்பிட கூட முடியாத நிலைமை.
அப்படியும் சாப்பிட்டால் வாந்தி வருகிறதாம். மேலும் அந்த அறையில் இருக்கும் தூசிகளால் சுவாசிக்க கூட முடியவில்லையாம். இவ்வாறு வதைகளை கொடுத்து மனதளவில் பாதிப்படைய செய்து.
நோயை ஏற்படுத்தி சிறையிலேயே முடித்துக் கட்ட சிஐடி பிரதானி சானி ஆபேசேக்கரவே திட்டம் தீட்டியுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சானி போன்ற ஓய்வூதியம் பொறும் பொலிஸாருக்கு எப்படி அதிகாரம் வந்தது யார் கொடுத்தனர்.கட்டாயம் இவை நிறுத்தப்பட வேண்டும்.எங்கள் நாட்டின் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவரை இவ்வாறு நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
அப்படி நிறுத்தாவிட்டால் மக்களுடன் குற்றப் புலனாய்வு விசாரணைகள் திணைக்களத்திற்கு முன்னால் இருந்து தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவோம் என சவால் விடுத்துள்ளார்.