பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
தற்போது இந்த சட்டமானது, செனட் சபை அனுதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் வருகிற செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இது அமலுக்கு வரும்.
இது தவிர, உயர் தர பாடசாலைகளிலும் கையடக்க தொலைப்பேசி பயன்படுத்த முழுமையாக தடை விதிக்க இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது. அவுஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக இத்தகைய கடுமையான சட்டத்தைக் கொண்டு வரும் 2-வது நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.