மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான நிவின் பாலி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சர்வம் மாயா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்வம் மாயா’ எனும் திரைப்படத்தில் நிவின் பாலி, பிரீத்தி முகுந்தன், அஜு வர்கீஸ், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரண் வேலாயுதன் நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபயர்ப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தருணத்தில் ‘சர்வம் மாயா’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.