சர்வதேச சட்ட மாநாடு யாழில் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்துக்கொண்டார்.

சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026 ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

தமிழக-மக்கள்-கழகம்

விஜய்க்கு எதிராக நடிகர் அஜித் அரசியலா? “தமிழக மக்கள் கழகம்” – கள்ளக்குறிச்சியில் ரசிகர்கள் புதிய கட்சி தொடக்கம்!

September 20, 2026

கள்ளக்குறிச்சி: திரைப்படங்களிலும் கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழக மக்கள்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

RAJMOHAN3

“மு.க.ஸ்டாலின் பட்டிமன்றப் பேச்சாளரைப் போல் எதுகை மோனையில் பேசுகிறார்!” – அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்

September 20, 2026

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளை விளக்கியதுடன்,

tn-che-08-vinayagar-script-photo-7204807_20092026210403_2009f_1789918443_215

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் அடுத்தடுத்து மோதல் மற்றும் சலசலப்பு!

September 20, 2026

சென்னை: பலத்த காவல் துறை பாதுகாப்புக்கு மத்தியில், சென்னையில் இன்று நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டினப்பாக்கம்

images (12)

“அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்குவால் அல்ல; உண்ணிக் காய்ச்சலால்!” – சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவரின் உயிரிழப்பு

HH9G3vpboAECv_k

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை!” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நாளை அவசர ஆலோசனை!

September 20, 2026

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையிலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நாளை முதல் 21 மாவட்டங்களில்

1200-675-27675426-thumbnail-16x9-protestannouncement

“பிற மாநிலங்களுக்கு இணையான ஊதியம் தேவை!” – அக்டோபர் 5-ல் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், தங்களுக்குப் பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வு மற்றும் பணிப்பெயர் மாற்றம்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

1200-675-26075167-thumbnail-16x9-ctrnirmal

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது!” – அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

September 20, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார்,

tamil-nadu-govt-employees

5 மாதங்களில் ரூ. 30,021 கோடி நிதிப் பற்றாக்குறை: தவெக அரசின் வரவு – செலவு கணக்கு வெளியீடு!

September 20, 2026

சென்னை: 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தமிழ்நாடு அரசின் தற்காலிக நிதிநிலை அறிக்கையை

sivajisanthi

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்

September 20, 2026

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்