சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் 2025-2027 ஆண்டுகளுக்கான அணிகளுக்கான புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி, நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பட்டியலில் அவுஸ்திரேலிய அணி முதல் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
மூன்றாம் இடத்தை இலங்கை அணியும், நான்காம் இடத்தை இந்தியாவும் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் 5ஆம் இடத்தையும் இங்கிலாந்து 6ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
பங்களாதேஸ் 7ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகள் 8ஆம் மற்றும் 9 ஆம் இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.