தமிழ் சினிமாவின் டாப் இளம் நடிகர்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் வெளியாகி இருந்தது. பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.
அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் பராசக்தி படத்திற்காக தான் வெயிட்டிங். படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து டான் பட புகழ் சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க இருக்கிறார்.
ரூ. 65 கோடி சம்பளத்தை ரூ. 40 கோடிக்கு சிவகார்த்திகேயன் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.