சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு ‘வரவுசெலவுத் திட்டம்’ முன்வைக்கப்படவில்லை – சஜித்

நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத் திட்டமாக அமையவில்லை. நாட்டு மக்கள் இன்று பல துயர்கரமான சூழ்நில்மைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மேலாக பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களினது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளன. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட உரை முடிந்த பின்னர், நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்த வரவுசெலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் வேலைகள் தமது இருப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வரவுசெலவுத் திட்டமாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சட்டக் கட்டமைப்புச் சட்டமொன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் இன்று திசைகாட்டி அரசாங்கத்தைச் சேர்ந்தோர் இந்த போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதை தவிர்த்து அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. மக்களுக்கு நிவாரணம் வழங்காத, IMF எழுதிய வரவுசெலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவுசெலவுத்திட்டமாகும். வறுமை ஒழிப்பு திட்டங்கள் எதுவும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடங்கி காணப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள வரவுசெலவு கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன. 2025 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை பார்க்கும் போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளினதும் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளை சமர்ப்பிக்காத நிதியமைச்சரான ஜனாதிபதி அவர்கள் இன்று பொய்களை அடிக்கி வைத்தார். இந்த ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி