சமஸ்டி அடிப்படையிலான ஆட்சிகுறித்து கனடா உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினிடம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தினார்.

அண்மையில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து சாணக்கியன் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த சந்திப்பின்போது, இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் குறித்த விடயங்களை சாணக்கியன் முன்வைத்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்பு இல்லாமை போன்ற விடயங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் தொடர்வதாகவும் அவ்வேளை சுட்டிக்காட்டினார்.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் வேலைவாய்ப்பு, பற்றாக்குறை, முதலீட்டு இல்லாமை மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு முழுமையடையாத நிலை ஆகியவை அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் என்றும் சாணக்கியன் கனடா உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.

கனடா போன்ற நாடுகள் பல இன, மொழி மற்றும் பண்பாட்டு பல்வகைமையைக் கொண்ட சமூகங்களில் சமஷ்டி ஆட்சிமுறையின் மூலம் அதிகாரப் பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த அனுபவங்கள் இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக இருக்க முடியும் என்பதையும் சாணக்கியன் இதன்போது உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.

எனவே, இலங்கையில் நிலையான அரசியல் தீர்வினை எட்டுவதற்காக நீதி, பொறுப்பேற்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பங்கீடு ஆகியவை ஒன்றிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அவ்வேளை வலியுறுத்தினார்.

Death-2

சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி

March 26, 2026

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகந்தவெவ பகுதியில், வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த குடும்பஸ்தர்

kara

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

March 26, 2026

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரும் பல தடவைகள் என்னிடம் முறைப்பாடு முன் வைத்தனர். இது தொடர்பாக பிராந்திய

lan

வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகளை விட்டு வனஜீவராசிகள் திணைக்களம் வெளியேற வேண்டும்!

March 26, 2026

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பெருமளவான மக்களின் நிலப்பரப்பை கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணிகளை மக்களிடமே கையளித்துவிட்டு உடன்

vi

தவெக தலைவர் விஜய் அரசியல் விமர்சகர் மற்றும் தி.மு.க மீது காட்டமான விமர்சனம்

March 26, 2026

தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,

horm

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அனுமதி

March 26, 2026

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு ஈரான்

Education

சித்திரைப் புத்தாண்டுக்கு முன் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள்

March 26, 2026

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ka

கார்க் தீவை எதிரிகள் கைப்பற்றத் திட்டம்

March 26, 2026

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன் எதிரி நாடுகள் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை

pet

வெப்பநிலை அதிகரிப்பு; செல்லப்பிராணிகள் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

March 26, 2026

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதால் இலங்கையில் விலங்குகள் ஒரு அமைதியான வெப்ப நெருக்கடியை எதிர்கொள்வதாக கால்நடை

ch

எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த சீனா இணக்கம்

March 26, 2026

கெமரூன் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், எரிசக்தி மற்றும் விவசாயத் துறைகளை மேம்படுத்துவதற்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத்

ffff

சமஸ்டி அடிப்படையிலான ஆட்சிகுறித்து கனடா உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் வலியுறுத்தல்

March 26, 2026

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் என

batt

மட்டக்களப்பில் பெண்களுக்கு நடந்த வன்முறைக்கு நீதிகோரிப் போராட்டம்

March 26, 2026

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை

rav

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலையில் பிள்ளையான் குழுவுக்கும் தொடர்பு!

March 26, 2026

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றையதினம்(26.03.2026) வழக்கு விசாரணைக்காக எடுத்துக்