சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்திய 7 சந்தேக நபர்கள், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பிரமிட் திட்டத்தை நடத்துதல், ஊக்குவித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய குற்றங்களுக்காக நேற்று வியாழக்கிழமை (24) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்னேவ, ஹோகந்தர, பேராதெனிய மற்றும் கொழும்பு 04 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் 40 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி குற்ற விசாரணைப் பிரிவினர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.