கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (06) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கட்டுநாயக்க பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 945 லீற்றர் கோடாவும், மற்றுமொரு சந்தேகநபரிடமிருந்து 1890 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.