கொழும்பு நகரின் தோற்றத்தை அழகுபடுத்தி, புதியதொரு சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இலங்கையின் மிகப் பாரிய வெளிப்புற LED டிஜிட்டல் திரையை 2025 டிசம்பர் 3 அன்று யூனிட்டி பிளாஸா திறந்து வைத்துள்ளது. On’ally Holdings PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், உயர் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 2023 நவம்பரில் புதுப்பொலிவு பெறும் வகையில் மீள்நிர்மாணச் செயற்திட்டங்களை ஆரம்பித்த யூனிட்டி பிளாஸாவின் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளமையையும் இந்நிகழ்வு குறித்து நிற்கின்றது.
காலி வீதி, வெள்ளவத்தை மற்றும் புகையிரத நிலைய வீதி ஆகிய இடங்களிலிருந்து தென்படும் வகையில் வானளாவிய உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று முகங்களைக் கொண்ட இப்பாரிய திரையானது நாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க டிஜிட்டல் கட்டுமானத்தைக் கொண்ட கட்டடங்களில் ஒன்றாக அதனை மேம்படுத்தியுள்ளது. நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மையம் என்ற வகையில் யூனிட்டி பிளாஸாவின் முக்கியத்துவத்தை இது மேலும் வலுப்படுத்துவதுடன், கொழும்பின் வர்த்தகத் துறையில் சமகாலத்தின் காட்சித் திரையை பிரதிபலித்து இத்துறையை மேலும் வளர்க்கின்றது.
இதனை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் பலரும் இதனை விளம்பரப்படுத்தலுக்கான திரை என்பதற்கு அப்பால், யூனிட்டி பிளாஸாவின் கட்டடக்கலைத் தோற்றத்தை மேம்படுத்தி, நகரத்தில் நவீனத்துவத்தின் அடையாளமாக அதனை மாற்றியுள்ளதுடன். தொழில்நுட்பம் தொடர்பான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் முன்னணி மையம் என்ற அதன் நற்பெயரையும் வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு குறித்து On’ally Holdings PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான எம். எச். ஐமால்தீன் கருத்து தெரிவிக்கையில், “இது வெறுமனே கொழும்பின் வான்பரப்பிற்கு ஒளியூட்டும் ஒரு நிகழ்வு கிடையாது. இலங்கையில் உண்மையான தகவல் தொழில்நுட்ப மையமாக யூனிட்டி பிளாஸாவை பரிணமிக்கச் செய்யும் அயாராத முயற்சியின் புத்தாக்க உணர்வை இது பிரதிபலிக்கின்றது. வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் தேசிய இலட்சியம் ஆகியவற்றின் அடையாளமாக இது தலைநிமிர்ந்து கம்பீரமாகக் காட்சி தருகின்றது.” அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
“தற்போது நிறுவப்பட்டுள்ள இத்திரையானது வெறுமனே விளம்படுத்தல் நோக்கம் சார்ந்தது என்பதற்கும் அப்பாற்பட்டது. வர்த்தகநாமங்கள், மக்கள் மற்றும் நகரத்தின் துடிதுடிப்பை சங்கமிக்கச் செய்யும் டிஜிட்டல் அடையாளமாக மாறியுள்ளது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணத்துவத்தின் கூட்டினாலேயே இம்முயற்சி சாத்தியமாகியுள்ளது. பாரிய அளவிலான வெளிப்புற டிஜிட்டல் ஊடக தீர்வுகள் மற்றும் நவீன பொறியியல் தராதரங்களுக்குப் பெயர்பெற்றுள்ளதுடன், சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்றுள்ள சீன வர்த்தகநாமமான Charming & Co. நிறுவனத்தால் இந்த LED தொகுதி தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளதுடன், இதனைப் பொருத்தும் பணிகளை On’ally Holdings PLC நிறுவனத்தின் உள்ளக பராமரிப்பு பொறியியல் அணி முன்னெடுத்துள்ளது. இந்த அளவிலான செயற்திட்டத்தை மிகவும் துல்லியமாக நிர்வகிப்பதில் இலங்கையின் வலுவான ஆற்றலை இது பிரதிபலிக்கின்றது. யூனிட்டி பிளாஸா கட்டடத்தின் வலுவான செயற்பாடுகள், நீடித்த நம்பிக்கை மற்றும் தங்குதடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவற்றை இந்த ஒத்துழைப்பு உறுதி செய்துள்ளது.
கொழும்பிற்கு நவீன அடையாளத்தைச் சேர்ப்பித்து, தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் குறித்த விளம்பரங்களை நிகழ்நேரத்தில் காட்சிப்படுத்துவதற்கு உதவும் வகையில் மிகவும் பிரபலமான அமைவிடத்தில் அமைந்துள்ள இத்திரையை சந்தைப்படுத்தல் துறையினருக்கும். தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகநாமங்களுக்கும் வழங்கி, இலங்கையின் வெளிப்புற டிஜிட்டல் விளம்பரப்படுத்தல் துறையை இது பரிணமிக்கச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தேசத்தின் டிஜிட்டல் எதிர்காலம் வளர்ந்து வரும் நிலையில் அதன் மையமாகவும், இலங்கையின் முன்னணி தொழில்நுட்பவியல் மையம் என்ற அதன் வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், இது யூனிட்டி பிளாஸாவின் பல ஆண்டு நவீனமயமாக்கல் பயணத்தின் உச்சக்கட்டத்தினையும் குறிக்கின்றது என்றார்.
By C.G.Prashanthan