மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, போரதீவுப் பற்று பிரதேச இந்து ஆலயங்களின் பங்கேற்போடு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாந்தை கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 448 குடும்பங்களிற்கு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.