வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் சிவில் உள்கட்டமைப்புகள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று இலங்கை நாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கை மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது என்று அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தரப்பினரும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள இலங்கை, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை பேணுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.