முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3 மணியளவில் தூண்டில் சகிதம் மீன்பிடிக்கச் சென்ற குறித்த இளைஞர் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தையார் தேடிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று (26) காலை கல்விளான் குளத்தில் மிதந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் கல்விளான் பகுதியைச் சேர்ந்த இளைஞரே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இளைஞருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில், மீன்பிடிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக இளைஞர் குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்