பெக்கோ இயந்திரம் தடம்புரண்டு கடலில் குடைசாய்ந்த சம்பவம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில், இன்று இடம் பெற்றுள்ளது.
கிண்ணியா குறிஞ்சாக்கேணிக்கான புதிய படகு பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம் பெற்றது. பாதையை கடலுக்குள் இறக்க பெக்கோ இயந்திரம் ஊடாக முற்பட்ட வேலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றது.
சம்பவத்தில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். படகு பாதை சேவையை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.