கிழங்கன் வைத்தியசாலை முன்பாக போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை!

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்திற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று (08) ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பி. தமேந்தி பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(01) பிரிவின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிழங்கன் ஆதார வைத்தியசாலை நுழைவாயில், ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதி அல்லது பொதுமக்கள் கூடும் ஏனைய இடங்களில் சட்டவிரோத ஊர்வலங்கள், போராட்டங்கள் அல்லது ஒன்றுகூடல்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் துணை மேயர் பெருமாள் சுரேந்திரன் ஆகியோருக்கு இந்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த இ.தொ.காவின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்ததாவது:

“இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், நாங்கள் அங்கு சென்றது போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அல்ல. வைத்தியசாலை பிரேத அறையில் அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் யுவதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே சென்றோம்.

ஆனால், நோர்வூட் பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகமும் இணைந்து நீதிமன்றத் தடையைப் பெற்று எங்களை தடுத்துள்ளனர். அந்த யுவதிக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை; குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.” என்றார்.

12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

March 11, 2026

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு

cru

கச்சா எண்ணெய் விலை சரிவு

March 11, 2026

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

he

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது “வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்” என்றும் ஐக்கிய

is

இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

March 11, 2026

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத்

d

பராமரிப்பு நிலையத்தில் 18 மாதக் குழந்தை குளத்தில் விழுந்து உயிரிழப்பு

March 11, 2026

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம்

WhatsApp Image 2026-03-11 at 10.43.39

பிராம்டனில் வாகனங்களை திருடிய இளைஞர் கைது

March 11, 2026

பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர்

lo

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

March 11, 2026

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை

man

தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

March 11, 2026

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த

tra_An

இ.போ.சபைக்கு புதிய கலாசாரத்தைக் கொண்டு வர பாடுபடுவோம்

March 11, 2026

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக

wash

140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

March 11, 2026

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர்

fin

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது

March 11, 2026

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய

ns

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

March 11, 2026

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம்