கியூபெக்கில் பிரெஞ்ச் தேர்வில் 1 மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் இக்கட்டில் ஒரு குடும்பம்

கியூபெக்கில் குடியேறியதிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வாரம் தங்கள் பட்டமேற்படிப்பு முடிந்த பின் வழங்கப்படும் வேலை அனுமதி (post-graduation work permit) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், உடனடியாக வேலைகளை விட்டு விலக வேண்டியதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அந்த கொலின் சில்வா என்பவர் தெரிவித்துள்ளார்.

கொலின் சில்வா கும்பத்தினர் சிறந்த வாழ்க்கையை நாடி மெக்சிக்கோவை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் கனடா பற்றியும் அதன் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு மனப்பான்மை கொண்ட நாடு என்பதையும் பற்றி அதிகமாக அறிந்ததால் கியூபெக் வந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உடலியல் சிகிச்சை (physiotherapy) துறையில் கல்வி பெற்ற கொலின் சில்வா, லாவல் பல்கலைக்கழகத்தில் எர்கோனாமிக்ஸ் (ergonomics) துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழித் தகுதிகள், முன் நிபந்தனைப் பாடநெறிகள் ஆகியவற்றை நிறைவேற்ற நீண்ட கால முயற்சியில் ஈடுபட்டார்.

“மூன்றாவது மொழியில் முதுகலைப் பட்டம் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நான் ஆங்கிலமும் ஸ்பானிஷும் பேசுகிறேன்; ஆனால் பிரெஞ்சில் முதுகலைப் படிப்பது பெரிய சவாலாக இருந்தது. ஆனால் நான் அதைச் சாதித்தேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த மே மாதம் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, பல ஆண்டுகளாக ஏற்பட்ட மன அழுத்தத்திற்குப் பின்னர் இறுதியாக நம்பிக்கை ஏற்பட்டதாக கொலின் சில்வா தெரிவித்தார். தனது துறையில் வேலை கிடைக்காத நிலையில், இரண்டு பள்ளிகளில் குழந்தைகள் பராமரிப்பு சேவைகளில் பணியாற்றத் தொடங்கினார்.

ஜனவரி 26 அன்று, பட்டமேற்படிப்பு முடிந்த பின் வழங்கப்படும் வேலை அனுமதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் அறிந்தார். மாகாணத்தில் இரண்டு வேலைகளை செய்து வந்த அவரது கணவரும் உடனடியாக வேலை நிறுத்த வேண்டும் என்றும், விரைவில் மெக்சிக்கோவுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குடியேற்ற ஆலோசகர் தெரிவித்தாக குறிப்பிட்ட கொலின் சில்வா இந்த அனுமதிக்கு தகுதி பெற விண்ணப்பதாரர்கள் பிரெஞ்சு மொழித் தேர்வின் நான்கு பகுதிகளில் தேர்ச்சி பெற வேண்டும். மூன்று பகுதிகளில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை விட அதிகமாகப் பெற்றிருந்தாலும், எழுத்துத் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் 427 மட்டுமே என அவர் கூறினார். குறைந்தபட்ச தேவையான மதிப்பெண் 428. ஒருபுள்ளி குறைந்ததால் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது என்றார்.

மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு இருந்தாலும் அதற்கான செலவு நூற்றுக்கணக்கான டாலர்கள் ஆகும் என்றும்இ அந்தச் செலவை தங்கள் குடும்பம் தாங்க முடியாத நிலை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என்னை வரவேற்ற கனடாவைப் பற்றி தவறாக பேச விரும்பவில்லை. ஆனால் இது மிகவும் மனிதாபிமானமற்றதாக எனக்கு தோன்றுகிறது,” என்று அவர் கூறினார். “நாங்கள் குப்பை போல நடத்தப்படுகிறோம்.”

குடியேற்ற வழக்கறிஞர் மேக்சிம் லாப்புவான் கூறுகையில் இந்தப் பிரச்சினை கொலின் சில்வாவுக்கு மாட்டுமன்றி பல மக்கள் எதிர்கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

2023 முதல், மாகாண மற்றும் மத்திய அரசுகள் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாகாணத்தில் குடியேறுவது மேலும் கடினமாகும் சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.

“காலப்போக்கில் புதிதாக வரும் குடியேற்றவர்களுக்கான வாயில்கள் மெதுவாக மூடப்பட்டன. இதனால் தற்போது இங்கே உள்ள சிலர் இனி தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்