சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நேரத்தில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் முறையிட 1926 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.