காற்றாலைகள் நிர்மாணத்திற்கு எதிர்ப்பு

மன்னார் மாவட்டத்தில் புதிதாக காற்றாலைகளுக்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் மன்னார் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த பிரதேசத்தில் 14 காற்றாலைகளை நிர்மாணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தற்போது குறிப்பிடுகிறார். இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இந்த காற்றாலைகளுக்கு மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடுவது என்பது தவறானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கம் கவிழ்வதற்கு காரணமான அமைச்சே அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் இருக்கின்றது. 2022 மற்றும் 2023 காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியின் போது அதிகளவில் பாதிக்கப்பட்ட அமைச்சே இது. இந்த அமைச்சின் வேலைத்திட்டங்கள் காரணமாகவே நாட்டில் போராட்டங்களும் தோற்றம் பெற்றன.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பிரதான காரணமாகவும் இந்த அமைச்சே இருந்தது. இதனால் ஆட்சிக்கு வர முன்னர் இந்த அமைச்சு தொடர்பில் செய்ய முடியாத பல்வேறு வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்கான வரியே அதன் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது. அவ்வாறான நேரத்தில் நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தனர். அதனை செய்ய முடியாது போயுள்ளது. ஆனால் அதனை செய்யக்கூடிய வகையிலான முறைமைகள் உள்ளன.

இலங்கையை போன்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளை பார்க்கும் போது அந்த நாடுகள் வலுச்சக்தியை எவ்வாறு முகாமைத்துவம் செய்கின்றது என்று ஆராய்ந்தால் இலங்கைக்கு சிறந்த பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளில் வலுச்சக்தி பாதுகாப்பு மிகவும் முன்னணியில் இருக்கின்றது.

அங்கு வலுசக்தி பாதுகாப்பு முகாமைத்துவத்திற்கு நிலத்தொடர்பு உள்ள நாடுகள் இந்தியாவுடன் எரிசக்தி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள மற்றைய நாடுகளுக்கு இடையில் அந்த இணைப்புகளை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. இதுபோன்று இலங்கை எதிர்காலத்தில் வலுச் சக்தி நெருக்கடிகள் ஏற்படாத வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவுடன் எரிபொருள் தொடர்புகளை ஏற்படுத்தி, குழாய் வழியில் அதனை இலங்கைக்கு கொண்டு வந்தால் எமக்கு இலங்கையில் எரிபொருள் விலைகளையும் குறைக்க முடியும். திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்து தேவையானவற்றை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

அதன்மூலம் எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பில் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாது. நாங்கள் இந்தியாவை பார்த்து பயப்படத் தேவையில்லை. இந்திய மக்கள்தான் எங்ளை பார்த்து பயப்பட வேண்டும். இலங்கையில் இருப்பிடம் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. இதனால் நாம் பயப்பட வேண்டியதில்ல.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் காலத்தில் ஜனாதிபதியினால் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் மன்னார் காற்றாலைகள் தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. அங்கு புதிதாக காற்றாலைகளுக்கு இடமளிக்கப்படாது என்று கூறப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த பிரதேசத்தில் 14 காற்றாலைகளை நாங்கள் செய்தே ஆக வேண்டும் என்று தற்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இந்த காற்றாலைகளுக்கு மக்கள் இணக்கப்பாடுகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிடுவது என்பது தவறானது.

இது தொடர்பில் மக்கள் மத்தியில் ஆதங்கம் இருக்கின்றது. அமைச்சரின் வீட்டுக்கு அருகில் காற்றாலையை அமைத்து அதன் சத்தம் உங்கள் காதுகளுக்கு வரும் போதே உங்களுக்கு அந்த பாதிப்பு தெரியும். இது போன்று இன்னும் பல சிக்கல்கள் இருக்கின்றன. 14 காற்றாலைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நிறைவேற்று ஜனாதிபதியென நீங்கள் அந்த காற்றாலைகளை அமைத்தாலும் அதனையும் தாண்டி எதனையும் செய்யக்கூடாது என்றும் கோருகின்றேன் என்றார்.

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,