காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்ட ‘அமைதி வாரியம்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தொடங்கினார். தற்போது இந்த வாரியத்தில் துருக்கி, ஹங்கேரி, அர்ஜென்டினா உள்ளிட்ட 35 நாடுகள் இணைந்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இதில் இணைய மறுத்துவிட்டன.
இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு வழங்கப்பட்ட அழைப்பை அதிபர் டிரம்ப் அதிரடியாக ரத்து செய்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் கார்னி ஆற்றிய உரையே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கார்னி தனது உரையில், ‘பெரிய நாடுகள் தங்களின் பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்காவைச் சுட்டிக்காட்டிக் பேசினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த டிரம்ப், ‘அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது.அடுத்த முறை அவர் தனது அறிக்கைகளை வெளியிடும்போது அதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்று சாடினார். உடனடியாக கார்னி, ‘கனடா அமெரிக்காவால் பிழைக்கவில்லை, கனடா மக்களால் செழிப்பாக இருக்கிறது. கனடாவும் அமெரிக்காவும் ஒரு குறிப்பிடத்தக்க கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன. காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்ட ‘அமைதி வாரியம்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தொடங்கினார். தற்போது இந்த வாரியத்தில் துருக்கி, ஹங்கேரி, அர்ஜென்டினா உள்ளிட்ட 35 நாடுகள் இணைந்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இதில் இணைய மறுத்துவிட்டன.
இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு வழங்கப்பட்ட அழைப்பை அதிபர் டிரம்ப் அதிரடியாக ரத்து செய்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் கார்னி ஆற்றிய உரையே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கார்னி தனது உரையில், ‘பெரிய நாடுகள் தங்களின் பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்காவைச் சுட்டிக்காட்டிக் பேசினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த டிரம்ப், ‘அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது.அடுத்த முறை அவர் தனது அறிக்கைகளை வெளியிடும்போது அதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்று சாடினார். உடனடியாக கார்னி, ‘கனடா அமெரிக்காவால் பிழைக்கவில்லை, கனடா மக்களால் செழிப்பாக இருக்கிறது. கனடாவும் அமெரிக்காவும் ஒரு குறிப்பிடத்தக்க கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.