கல்லறையைத் தோண்டிய மயானக் காப்பாளர் கைது

மொரட்டுவை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மயானம் ஒன்றில், புதைக்கப்பட்ட சடலத்திலிருந்த தங்க நகைகளைத் திருடுவதற்காக கல்லறையைத் தோண்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்செயலில் ஈடுபட்ட மயானக் காப்பாளர் மற்றும் இருவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவர்களில் ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவை ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்மணி ஒருவர் கடந்த 15-ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் ஏழாம் நாள் தானம் (நினைவுச் சடங்கு) நேற்று (22) நடைபெற்ற நிலையில், அவரது மகள் ராவத்தாவத்தையிலுள்ள “சுசான் அரம” மயானத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற மகள், மூவர் தனது தாயின் கல்லறையைத் தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அந்த நபர்கள், “தங்கள் திட்டம் தோல்வியடைந்துவிட்டது” எனக் கூறிவிட்டு மயானத்தின் மதில் வழியாகப் பாய்ந்து தப்பியோடியுள்ளனர்.

மகளின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர், அந்த மயானத்தின் காப்பாளர் எனத் தெரியவந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், மது அருந்திய பின் மயானத்தில் குழி தோண்டும் ஏனைய இருவருடன் இணைந்து, சடலத்திலிருந்த நகைகளை எடுப்பதற்காகவே இந்தக் கல்லறையைத் தோண்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இறந்த பெண்மணி எட்டு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்ததாகத் தவறாகக் கருதி, உடலைத் தோண்டுவதற்கு நேற்றைய தினத்தைத் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர்.

எனினும், சடலத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகள் என அவரது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தங்க நகைகளைத் திருடுவதற்காக இச்செயல் நடத்தப்பட்டதா அல்லது சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சவப்பெட்டியைத் திருடுவதற்காகவா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், தப்பியோடிய ஏனைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.