கனடா பிராம்ப்டன் நகராட்சி அரசாங்கம், ஜனவரி 31 அன்று பிராம்ப்டன் நகர மன்றத்தில் (City Hall) நடைபெறும் தமிழ் பாரம்பரிய மாதம் மற்றும் தைப்பொங்கல் தொடர்பான சிறப்பு சமூகக் கொண்டாட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வின் போது சமூகக் கொடியேற்ற விழா, உற்சாகமிக்க பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய தமிழ்ச் சமையல் – இலவச உணவு வழங்கல் ஆகியவை இடம்பெறும். இதன் மூலம், பிராம்ப்டனின் வசிக்கின்ற தமிழ் சமூகத்தின் செழுமையான வரலாறு, பண்பாடு மற்றும் சமூக வலிமை ஆகியவற்றை நாம் கௌரவிக்கிறோம் என பிராம்ப்டன் நகராட்சி அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு நிகழ்வு பிராம்ப்டன் தமிழ் சங்கம் மற்றும் பிராம்ப்டன் தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதோடு அல்கோமா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.