கனடாவின் புதிய உணவுப் பொருள் லேபிள் அமைப்பு மிகவும் பயனுள்ளது – நிபுணர் கருத்து

கனடாவில் விற்பனை செய்யப்படும் சில மளிகைப் பொருட்களில், நுகர்வோர் தங்களின் உணவுச் சார்ந்த தேர்வுகளை மேலும் அறிவுப்பூர்வமாக மேற்கொள்ள உதவும் வகையில், இனி கட்டாய எச்சரிக்கை லேபிள்கள் இடம்பெறவுள்ளன.

ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த லேபிள்கள், பொருட்களில் அதிக அளவில் திட கொழுப்பு (saturated fat), சோடியம் அல்லது சர்க்கரை உள்ளதா என்பதைத் தெரிவிக்கும் வகையில், பொட்டலத்தின் முன்புறத்தில் தெளிவாகக் காணப்படும் கருப்பு-வெள்ளை எச்சரிக்கைச் சின்னங்களைக் கொண்டுள்ளன.

ஹெல்த் கனடா தெரிவிப்பதாவது, இவ்வகை கூறுகள் பக்கவாதம், உடல் பருமன், இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும். “திட கொழுப்பு, சர்க்கரை அல்லது சோடியம் ஆகியவற்றின் நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டும் அல்லது அதற்கு மேல் கொண்ட முன்-பொதியிடப்பட்ட (prepackaged) உணவுப் பொருட்களில் இந்த லேபிள் கட்டாயமாக இடம்பெற வேண்டும்” என ஹெல்த் கனடா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது, தகவலை வெளிப்படுத்தும் ஒரு வேறுபட்ட முறையாகும்” என டொரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து பள்ளியின் உதவிப் பேராசிரியர் ஜெனிஃபர் லீ, கடந்த வாரம் தெரிவித்தார். பெரும்பாலான பொதியிடப்பட்ட உணவுகளின் பின்புறத்தில் காணப்படும் ஊட்டச்சத்து லேபிளை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய எச்சரிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கினார்.

கனடாவில் பொதியிடப்பட்ட உணவுகளில் பொதுவாக கூறுப் பட்டியல் மற்றும் ஊட்டச்சத்து லேபிள் இடம்பெறும். அதில், முக்கிய ஊட்டச்சத்துக்கள் தினசரி பரிந்துரைக்கப்படும் அளவில் எவ்வளவு சதவீதம் அந்தப் பொருளில் உள்ளது என்பதும் குறிப்பிடப்படும். ஒரு ஊட்டச்சத்தின் தினசரி மதிப்பில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், ஹெல்த் கனடா அதனை “அதிகம்” எனவும், ஐந்து சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் “குறைவு” எனவும் வகைப்படுத்துகிறது.

ஒரு பொருளின் முன்புறத்தில் திட கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு தொடர்பான எச்சரிக்கை லேபிள் தேவையா என்பதைக் தீர்மானிப்பது, “பொதுவாக 15 சதவீத வரம்பை அடிப்படையாகக் கொண்டதாகும்” என லீ கூறினார்.

“கனடாவில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியிலும், உணவுப் பொதிகளின் முன்புறத்தில் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய இத்தகைய சின்னங்கள் இடம்பெறுவது, உணவுச் சார்ந்த தகவல்களை மக்களிடம் தெரிவிப்பதில் மிகுந்த பயனளிக்கும் முறையாக உள்ளது” என லீ தெரிவித்தார். மேலும், இச்சின்னங்களின் அதிகமான காட்சித் தெளிவு, திட கொழுப்பு, சோடியம் மற்றும் சர்க்கரை பற்றிய விழிப்புணர்வை நுகர்வோரிடையே அதிகரிக்கிறது என்றும், கனடியர்கள் இவற்றை “அதிக அளவில்” உட்கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுளார்.

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.