கனடாவின் ஆறு கூட்டாட்சித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரும் டிசம்பர் 7, 2026 திங்கட்கிழமை நடைபெறும் என பிரதமர் அறிவித்துள்ளார். House of Commons சபையில் காலியாக உள்ள ஆறு நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்தல்கள் மூன்று மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன
ஆறு தொகுதிகளிலும் போட்டியிடும் லிபரல் கட்சியின் வேட்பாளர் பட்டியலை முழுமையாக இறுதி செய்த சில மணிநேரங்களிலேயே இந்த இடைத்தேர்தல் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். முன்னாள் கேபினட் அமைச்சர் Steven Guilbeault கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்ததால் காலியான Montreal தொகுதியில் Desjardins நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாகியுமான Guy Cormier லிபரல் கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய எம்.பி.க்களின் விலகல்களால் காலியான இடங்களைக் கைப்பற்ற அனைத்து முக்கியக் கட்சிகளும் தீவிரமாகப் போட்டியிடுவதால், இந்த டிசம்பர் இடைத்தேர்தல் மார்க் கார்
தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய அரசியல் பரிசோதனையாகப் பார்க்கப்படுகிறது.