கனடா நாட்டின் ஓர் அங்கமாக இருக்கும் அல்பர்ட்டா (Alberta) மாகாணம், ஒரு தனி நாடாகப் பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்த ‘பொதுவாக்கெடுப்புக்’ (Referendum) கேள்வியை அல்பர்ட்டா தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்கான முதல் கட்டமாக, முன்மொழியப்பட்ட அதிகாரப்பூர்வக் கேள்விக்குத் தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி வழங்கியது.
“அல்பர்ட்டா மாகாணம் கனடாவின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்திவிட்டு, ஒரு சுதந்திர நாடாக மாறுவதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?” என்ற கேள்வி மீது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான அனுமதியே, தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி அங்கீகரிக்கப்பட்டாலும், உடனடியாகப் பொதுவாக்கெடுப்பு நடந்துவிடாது என்று கூறப்படுகின்றது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பும் ‘அல்பர்ட்டா ப்ராஸ்பெரிட்டி ப்ராஜெக்ட்’ (APP) அமைப்பு, அடுத்த 4 மாதங்களுக்குள் சுமார் 1,78,000 அல்பர்ட்டா மக்களிடம் நேரடி கையெழுத்துகளைப் பெற வேண்டிய தேவை தற்போது உள்ளமை குறிப்பிடத்தக்கது.