கந்தளாய் பிரதான வீதியில் உள்ள 91ஆம் கட்டைப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி நேர்ந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று(28) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே பலத்த காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி சாரதியும் சிறு காயங்களுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.