கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளுக்காக பதவி நீக்கங்கள் செய்வது அழகில்லை

இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது சிறீநேசன் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. தமிழ் மக்களை பொறுத்த வரையில் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி என்பன 76 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றன. இக்காலத்தில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்ந்திருக்கின்றார்களா? சுதந்திரமாக செயற்பாடுகளின் ஈடுபட்டிருக்கின்றார்களா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. குடியுரிமைச்சட்டம், வாக்குரிமைச்சட்டம் என்பன கொண்டு வந்து மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்ற மக்களாக மாற்றி விட்டார்கள்.

அந்த அடிப்படையில் தான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தோற்றம் ஆரம்பித்தது. அந்த வகையில் இலங்கையின் சுதந்திர தினம் என்பது எங்களைப் பொறுத்த வரையில் திண்டாட்ட தினமாகவே இருந்து வந்திருக்கின்றது. தென்னிலங்கையில் தான் அது கொண்டாட்ட தினமாக இருக்கின்றது. கடந்த காலங்களிலும் இதனை நாங்கள் திண்டாட்ட தினமானவே அனுஸ்டித்திருக்கின்றோம்.

அந்த இம்முறை சுதந்திர தினத்தையும் கொண்டாட முடியாத திண்டாட்ட தினமாக ஒரு கரிநாளாகவே அனுஸ்டிக்க இருக்கின்றோம். இந்த அரசாங்கம் வந்து ஒரு வருட காலம் தான் ஆகின்றது. நீங்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்களா என்று கேட்கின்றார்கள். ஆனால் புதிய அரசாங்கம் வந்த உடனடியாக தேசிய இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. குறைந்தபட்சம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முன்நடவடிக்கைகளையாவது அவர்கள் எடுத்திருக்க வேண்டும் என்று தான் சொல்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வீதிகளில் இருந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான நீதிகள் கிடைப்பதற்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. சிலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால் இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் பலர் இன்றும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பல நட்சத்திரங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

கைப்பற்றப்பட்ட நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. எமது மாவீரர்களின் துயிலுமில்லங்களில் சப்பாத்துக் கால்களுடன் இராணுவத்தினர் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். எமது சகோதரர்கள் மறைந்த பிற்பாடும் கூட அவர்களது மயானங்களில் இராணுவ சப்பாத்துக் கால்கள் மிதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அரசியற் கைதிகள் விடுதலை இல்லாமல் இருக்கின்றனர்.

இந்த அரசாங்கத்தில் மக்கள் ஒரு எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். தற்போது கிவுல் ஓயா திட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் வாக்குறுதி மீறப்பட்டிருக்கின்றது. எந்தவொரு மாவட்டத்தினதும் குடிப்பரம்பலை மாற்றுகின்ற வகையில் குடியேற்றத் திட்டங்கள் இடம்பெறாது என்ற வாக்குறுதியை அவர் வழங்கியிருந்தார்கள்.

ஆனால் இந்த கிவுல் ஓயாத் திட்டம் தமிழ் மக்களின் குடிம்பரம்பலைக் குறைப்பதற்கான திட்டமாகவும், பெரும்பான்மையினருக்கு ஒரு சாதகமான திட்டமாகவும் இருக்கின்றது. திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்திருக்கின்றார்கள். அது சட்டவிரோதம் என்று தெரிந்தும் அதனை அகற்ற முடியாது என்கிறார்கள் அதேபோன்று தான் தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

சுட்டவிரோதமாக அமைக்கப்படுகின்ற கோவில்கள், தேவாலயங்கள் இடிக்கப்படுகின்ற போது ஏன் சட்விரோதமாக அமைக்கப்படுகின்ற விகாரைகள் மாத்திரம் அப்படியே இருக்கின்றன? எமது மக்கள் எதுவித பயனுமின்றி தெருவில் நிற்கும் போது சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாட முடியும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்களின் கருத்துகளை மதிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீருடன் எமக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள். எனவே அந்த கரிநாள் நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சிறிதரன் எம்.பி தொடர்பில் பதில் பொதுச்செயலாளர் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார், பதில் தலைவர் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார். அவரை நீக்குவதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கவில்லையென தலைவர் தெரிவித்திருந்தார். செயலாளர் அவரை நீக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

நாங்கள் எப்போதும் நேர்மறையான கருத்தினை ஏற்றுக்கொள்பவர்கள். எங்களின் ஆதரவாளர்கள், அபிமானிகள் எங்களிடம் பல்வேறுவிதமான கேள்விகளை கேட்டு குடைந்து கொண்டிருக்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது.

தலைவரின் கருத்தினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அவரை நீக்குவது தீர்மானத்தினை இன்னும் எடுக்கவில்லையென்று கூறியிருக்கின்றார்.

பலவந்தமாக நிர்ப்பந்தமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது கட்சியின் வளர்ச்சியை தூண்டும் என்று சொல்வதை விட கட்சியினை பின்னடையச்செய்யும் என்பதே எனது முடிவு. தலைவர் கூறிய கருத்திற்கு அமையவே நாங்கள் மக்களுக்கு கூறிவருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு