கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை

ரைவலைக் கைத்தொழிலுக்காக இயந்திர சாதனங்களைப் பயன்படுத்துவதனால் கரையோரச் சூழல் அமைப்பிற்கும் ஏனைய மீனவ சமூகத்தினருக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அனைத்து கரைவலை மீனவர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றார்.

உழவு இயந்திரங்கள் (Tractors) மற்றும் விஞ்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராகச் சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், 1984 ஆம் ஆண்டின் கரைவலை ஒழுங்குவிதிகளுக்கு அமைய, கரைவலைக் கைத்தொழில் என்பது இயந்திரச் செயற்பாடுகள் இன்றி, மனித வலுவை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பாரம்பரியத் தொழில் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“புதிதாகச் சட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை நடைமுறையிலுள்ள சட்டத்தை அமுல்படுத்துவதே இடம்பெறுகிறது. நாட்டில் இயங்கும் 827 கரைவலைப் பாடுகளில் (Maadel operations) பெரும்பான்மையாக தென் மாகாண மீனவர்கள், இன்றும் எவ்விதப் பிரச்சினையுமின்றி மனித வலுவைக் கொண்டு பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்,” என கஹவத்த தெரிவித்தார்.

விஞ்சு மற்றும் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதனால் பின்வரும் சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாகப் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் நீளமான வலைகள் மற்றும் அதிக பாரமான இரும்புத் துண்டுகளைப் பயன்படுத்துவதால் கடல் தரை சுரண்டப்பட்டு முருகைக் கற்கள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைதல்.

கரையோரங்களில் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்துவதனால் கரையோர அரிப்பு ஏற்படுதல் மற்றும் கரையோரச் சூழல் அமைப்புகள் அழிவடைதல்.

நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிப் பாரிய கடற்பரப்பை வளைப்பதனால் சிறிய மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கும் ஏனைய மீனவர்களுக்கும் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடையை ஏற்படுத்துதல்.

“நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சட்டவிரோதமான மற்றும் சூழலை அழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும், கடல் வளத்தையும் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்,” என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

ஆகையால், ஏனைய மீனவர்களுக்கோ அல்லது சுற்றாடலுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில், சட்டரீதியான கட்டமைப்பிற்குள் நின்று பாரம்பரிய கரைவலைத் தொழிலில் ஈடுபடுமாறு திணைக்களம் அனைத்து கரைவலை உரிமையாளர்களிடமும் அவர் கோரியுள்ளார்.

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான